×

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட 13 பேர் வேட்புமனு ஏற்பு 6 மனுக்கள் தள்ளுபடி

பரமக்குடி, மார்ச் 28: பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததில், திமுக.,அதிமுக உள்ளிட்ட 13 வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டது. 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்ஏப்.18ம் தேதி நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் திமுக, அதிமுக உள்பட 19 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று பரமக்குடி சட்டமன்ற தேர்தல் அலுவலர் ராமன் தலைமையிலான அதிகாரிகள் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யதனர்.

இதில் திமுக வேட்பாளர் சண்.சம்பத்குமார், அதிமுக சதன்பிரபாகர், அமமுக டாக்டர் முத்தையா, மக்கள் நீதி மய்யம் டாக்டர் சங்கர், சுயேச்சை வேட்பாளர்கள் சண்முகராணி, ராதாகிருஷ்ணன், வாசு, சுரேஷ், சிரஞ்சீவி, முத்தையா, பாலகிருஷ்ணன், முத்தையா ஆகியேர் வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது. கட்சிகளுக்கு மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகளான சரஸ்வதி, நிறைகுளத்தான், சாந்தி, நம்பிராஜன், உக்கிரபாண்டியன், கார்மேகக் கண்ணன் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.வரும் ஏப்.18ம் தேதி நடைபெறும் தேர்தலில் பரமக்குடி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் உன்பட 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

Tags : Paramakudi Assembly ,constituency ,nominees ,AIADMK ,DMK ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...