×

நத்தம் அருகே டூவீலரில் தவறி விழுந்த பெண் லாரி மோதி பலி கணவர் கண்எதிரில் சோகம்

நத்தம், மார்ச் 28: நத்தம் அருகே லிங்காவடியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி பெரியக்கா (45). சம்பவத்தன்று இருவரும் டூவீலரில் மதுரைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பரளி அருகே வந்தபோது டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த பெரியக்கா எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண் எதிரில் மனைவி லாரியில் அடிபட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : tunnel ,Natham ,
× RELATED ‘எங்கு பார்த்தாலும் குண்டும்,...