×

சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்

சேலம், மார்ச் 28: கோடை விடுமுறையை யொட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளத்துக்கு, நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறையையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல்- எர்ணாகுளத்துக்கு (06039) இடையே நாளை (29ம் தேதி) இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளத்துக்கு சென்றடைகிறது. இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக செல்கிறது.

திருச்சி- எர்ணாகுளத்துக்கு (06026) இடையே ஜூன் 1,8,15,22,29ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், திருச்சியில் இருந்து இரவு பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளத்துக்கு சென்றடைகிறது. இந்த ரயில், ரங்கம், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக எர்ணாகுளத்துக்கு செல்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai Central ,Ernakulam ,
× RELATED கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக...