×

சேலத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு வேட்பாளர் பார்த்திபன் பிரசாரத்தை தொடங்கினார்

சேலம், மார்ச் 28:சேலம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக கூட்டணி கட்சிகளின் தலைமை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. பின்னர், திமுக வேட்பாளர் கன்னங்குறிச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக கூட்டணி கட்சிகளின் தலைமை தேர்தல் அலுவலகம், சாரதா கல்லூரி சாலையில்  அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். சேலம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் கலந்து கொண்டு பேசுகையில், ‘மத்தியில் ஆளும் மோடி அரசையும், மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அரசையும் அகற்ற வேண்டும். இதற்காக திமுக கூட்டணி  வெற்றி பெற வேண்டும்.

இதற்காக அனைவரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். திமுக கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும்,’ என்றார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், கொமதேக மாநகர் மாவட்ட செயலாளர் லோகநாதன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர் அன்வர்பாஷா, முன்னாள் மேயர் சூடாமணி, மத்திய மாவட்ட திமுக அவைத்தலைவர் கலைமுதன், பொருளாளர் சுபாஷ், மாநகர் செயலாளர் ஜெயகுமார், தீர்மான குழு உறுப்பினர் தாமரைகண்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து,  சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி பகுதியில் இருந்து திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் பிரசாரத்தை தொடங்கினார். கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதி, அஸ்தம்பட்டி பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் நிர்வாகி ஜெயபிரகாஷ், மதிமுக நிர்வாகி ஆனந்தராஜ் மற்றும் பலர் வேட்பாளருடன் சென்று வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் செல்லும் இடங்களில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags : election office ,campaign ,Salem ,opener ,DMK ,Parthiban ,
× RELATED பெண்களின் சக்திதான் எனக்கு...