×

நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்

நாமக்கல், மார்ச் 28: நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் தலைமை வகித்தார். வேட்பாளர் சின்ராஜை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், ‘நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. அதிமுக அரசுக்கு எதிரான மனநிலை கிராமப்புற மக்களிடம் காணப்படுகிறது,’ என்றார். தொடர்ந்து, பேசிய திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜ், ‘நாமக்கல் தொகுதி மக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறேன். ஒரு பைசா கூட யாரிடமும் லஞ்சம் பெற மாட்டேன்,’ என்றார்.

செயல்வீரர்கள் கூட்டத்தில், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்,மாவட்ட ெசயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்குமார், நகர பொறுப்பாளர் ஆனந்த், முன்னாள் பொறுப்பாளர் மணிமாறன், சட்டத்திட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், மதிமுக வழக்கறிஞர் பழனிசாமி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டதலைவர் செழியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மும்பை அர்ஜூன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Democrats ,meeting ,allies ,DMK ,Namakkal ,
× RELATED ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து...