×

அஞ்செட்டியில் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 28: அஞ்செட்டியில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம், மாநில துணை செயலாளர் கோணப்பன் தலைமையில் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவக்குமார் வரவேற்றார். கூட்டத்தில், அஞ்செட்டி தாலுகாவிற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் போக்க வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையான அஞ்செட்டி-தொட்டள்ளா அணை திட்டத்தை செயல்படுத்த முன்வந்து, நிலையான வாக்குறுதியை யார் அளிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆதாரவாக செயல்படுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கிருஷ்ணப்பா, வெங்கடேசன், தங்கவேல், சின்னசாமி, பசுவராஜ், முருகன், பெரியசாமி, முனியப்பன், சுப்ரமணி, மகளிர் அணி முனியம்மா, பாக்கியம்மா, லட்சுமி, லட்சுமம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Tamilnadu ,farmers association consultation meeting ,
× RELATED மலையாள மொழி பேசும் சகோதர...