×

கிடப்பில் போடப்பட்ட குமாரகுடி சேவை மைய கட்டிடம் கட்டும் பணி

சேத்தியாத்தோப்பு, மார்ச் 28:  சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரகுடி கிராமத்தில் கிராம சேவை மைய கட்டும்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.சேத்தியாத்தோப்பு அருகே குமாரகுடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஆயிரம் குடியிருப்பு வாசிகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்களின் நலன் கருதியும், அவர்களின் நேரம் விரயம், அலைச்சல் ஆகியவைகளை கருத்தில் கொண்டும் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலை சம்பளம் பெறுவதற்காகவும், மேலும் சாதி, வருமானம், இருப்பிடம், போன்ற சான்றிதழ்களை பெறுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை-கும்பகோணம் சாலையில் குமார குடி கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் பாதியிலேயே கட்டிட பணியை கிடப்பில் போட்டுவிட்டு சென்றுவிட்டனார்.

இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்டத்தில் இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் கிராம சேவை கட்டிட பணி பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர் என்றும் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் விவசாயிகளின் நண்பன் என்று சொல்லும் மண்புழு உரம் தயாரிப்பு என்ற பெயரில் ஒரு கிராமத்தில் ஒரு மண்புழு கொட்டகை கட்ட ரூ.ஒரு லட்சம் வீதம் வழங்கி திட்டத்தை செயல்படுத்தாமல் பல லட்சம் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த முறை கேடுகளில் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கும், சில மாவட்ட அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமா எனவும் பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். இந்த கட்டிட பணி ஒப்பந்தங்களை ஆளும் அதிமுகவினரே டெண்டர் எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்து கட்டிட பணிகளை சீரமைத்து தர வேண்டும் எனவும், தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : building center ,Kilinochchi ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை...