×

திருப்போரூர் தொகுதியில் தேர்தல் பார்வையாளர் பொது மக்களுடன் சந்திப்பு

திருப்போரூர், மார்ச் 28: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி மஜ்னூர் உசேன். திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது மக்களை சந்தித்தார். அப்போது அவர், பொதுமக்களிடம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது. அதில், ஏதேனும் குறைகள் உள்ளதா, மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, பொதுமக்களில் சிலர் நீண்ட தூரத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தேர்தல் ஆணையம் சார்பில் வாகன வசதி செய்து தர வேண்டும் அல்லது அரசியல் கட்சிகள் வாகன வசதி செய்து தர அனுமதிக்க வேண்டும் என்றனர்.  அதற்கு பதிலளித்த அவர், வாகன வசதி செய்து தர வாய்ப்பில்லை. அரசியல் கட்சிகள் வாகனவசதி செய்யக்கூடாது என்றார். மேலும், 95 சதவீத வாக்குச்சாவடிகள் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்களிக்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவர்களுக்கு வாக்கு செலுத்த முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார். அவருடன் திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் க.ராஜூ, உதவி தேர்தல் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர். பொதுமக்கள் போர்வையில் கிராம உதவியாளர்கள் பொதுமக்களுடன் ஆலோசனை என்று அறிவித்து மாலை 3 மணி முதல் காத்திருந்தும், பொதுமக்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த விஏஓக்கள், கிராம உதவியாளர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செய்து சமாளித்தனர். 4 பேர் மட்டுமே பொதுமக்களாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Election visitor ,constituency ,public ,
× RELATED சமத்துவபுரம் அமையும் இடத்தில்...