×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை, மார்ச் 28: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊத்துக்கோட்டை பேரூராட்சியில்  விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு,  100 சதவீதம்  வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்காக, அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை பொதுமக்களிடம் பல்வேறு வகையில் பிரசாரம் செய்து வருகிறது. அந்த வகையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் எந்த வித விழிப்புணர்வு பிரசாரமும் நடைபெறவில்லை என நேற்றைய ‘தினகரன்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் ஊத்துக்கோட்டை செயல் அலுவலர் (பொ) மாலா, துப்புரவு மேற்பார்வையாளர் குமார், அலுவலர்கள் முனிச்சந்திரசேகர், வெங்கடேசன், முருகவேல், கோபி ஆகியோர் கலந்துகொண்டு, வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், அனைவரும் தவறாமல் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணியானது பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி நேருசாலை, நேரு பஜார், அண்ணாசிலை வழியாக மீண்டும் பேரூராட்சி அலுவலகம் அடைந்தது. இதில் ‘எனது வாக்கு எனது உரிமை’, ‘எனது வாக்கு விற்பனைக்கல்ல’, ‘வாக்காளர் என்பதின் பெருமை வாக்களித்தால் மட்டுமே, அனைவரும் வாக்களிப்பீர் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Tags : town ,Uthukkottai ,
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...