×

அம்பையில் அரசியல் கட்சிகளின் கொடி பீடங்கள் இடித்து அகற்றம்

அம்பை,  மார்ச் 28:  அம்பாசமுத்திரத்தில் போலீஸ் துணையுடன் அரசியல் கட்சிகளின் கொடிபீடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 18ம் தேதி நடக்கிறது.  இதற்கான அறிவிப்பு வெளியான கடந்த 10ம்தேதி முதல் நன்னடத்தை விதிகள்  அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிகளை தேர்தல் ஆணையம், நீதிமன்றம் உத்தரவுபடி போலீசார் துணையுடன் அந்தந்தப் பகுதி ஊராட்சி,  பேரூராட்சி, நகராட்சி  அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். அந்தவகையில் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினர்  கொடி மற்றும் கொடி கம்பங்களை மட்டும் அகற்றி விட்டு பீடங்களை விட்டு  சென்றனர். அதில் வரையப்பட்ட கட்சி சின்னங்கள் வெளியே தெரியும் படி  மூடப்பட்டிருந்தன.

a பின்னர், நீதிமன்ற உத்தரவுபடி அம்பை நகராட்சி  ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் பணி மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார  ஆய்வாளர் சிதம்பரராமலிங்கம், நகர அமைப்பு ஆய்வாளர் பொன்னுச்சாமி,  நெடுஞ்சாலைதுறை ஆய்வாளர் வெள்ளத்துரை உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் போலீசார்  உதவியுடன் அம்பை பிரதான சாலை, ஊர்க்காடு, முடப்பாலம், கோயில்குளம், காலேஜ்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கட்சி பீடங்களை ஜேசிபி  மூலம் இடித்து அகற்றினர்.
 இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமடைந்ததும் திமுகவினர் நகரச்செயலாளர்  பிரபாகரன் தலைமையில் திரண்டுவந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் நீதிமன்றம் மற்றும் கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் நகலை அதிகாரிகள்  காண்பித்து விளக்கம் அளித்தனர். அதன்பிறகே அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : parties ,ambush ,
× RELATED ஒடிசாவில் ஒரே தொகுதியில் 3 கட்சிகளில் போட்டியிடும் உறவினர்கள்