×

அரக்கோணம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை பொதுப் பார்வையாளர் ஆய்வு

அரக்கோணம், மார்ச் 28: தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. அரக்கோணம் மக்களவைத் தொகுதி என்பது அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, மற்றும் திருத்தணி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியவையாகும். அரக்கோணம் மக்களவை தொகுதியில் 14,79,961 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், வாக்களிப்பதற்காக 1,708 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதியில் 250 வாக்குச்சாவடி மையங்களும், சோளிங்கரில் 299, ஆற்காட்டில் 291, ராணிப்பேட்டையில் 285, காட்பாடியில் 254 மற்றும் திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் 329 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அரக்கோணம் மக்களவை தொகுதி மற்றும் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கான மையம் வாலாஜா டோல்கேட் அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கும் எண்ணும் மையத்தை அரக்கோணம் மக்களவை தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் னிவாஸ் நரேஷ் நேற்று பார்வையிட்டார். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் தற்போது செய்யப்பட்டு வரும் ரூம், வாக்கு எண்ணும் இடம், முகவர்கள் பார்வையிடும் இடம் போன்றவைகள் வசதியாக உள்ளனவா? என ஆய்வு செய்தார். அப்போது, அரக்கோணம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலருமான பார்த்திபன் இருந்தார். இதையடுத்து, மையத்தில் பாதுகாப்பு வசதிகள் எவ்வாறு? மேற்கொள்ளப்படுகிறது என ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தாசில்தார்கள் மற்றும் காவல் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Arakkonam Lok Sabha Voting Number Center ,
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...