×

ஸ்டெல்லா மேரீஸ் பொறியியல் கல்லூரியில் மேலைநாட்டு வேலைவாய்ப்பிற்கான வளாகத்தேர்வு 30ம் தேதி நடக்கிறது

நாகர்கோவில், மார்ச் 28: ஸ்டெல்லா மேரீஸ் பொறியியல் கல்லூரியில் 2018ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மேலைநாடான கத்தாரில் வேலைவாய்ப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2017ம் ஆண்டில் வெற்றி பெற்ற மாணவர்கள் கத்தாரில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேற்கொண்டு எடுத்த முயற்சியின் விளைவாக 2018ம் ஆண்டிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பணிநியமன வளாகத்தேர்வு வருகிற 30ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கல்லூரி நிறுவனத் தலைவர் டாக்டர் நசரேத்சார்லஸ்  தெரிவித்தார்.

Tags : Stella Marie ,Engineering College ,University of Western Universities ,
× RELATED அரசு பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு