×

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயம், கல்வி கடன்கள் ரத்து ஏரலில் கனிமொழி பிரசாரம்




ஏரல், மார்ச் 28: இடைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன், கல்வி கடன் ரத்து செய்யப்படும் என ஏரலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேசினார்.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி ஏரலில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;  கடந்த ஐந்து ஆண்டு பாஜ ஆட்சியில் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.  நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தமிழகத்திற்கு பிரதமர் ஓடோடி வருகிறார். பாஜ பினாமி ஆட்சியாக செயல்பட்டு வரும் எடப்பாடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெண்களுக்கு நியாயம் கிடைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாக்கதான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தமிழக மக்களை மதிக்க கூடிய ஒரு ஆட்சி மத்தியில் வரவேண்டும் என்றால் அது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வரவேண்டும். தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கு பின்னர் திமுக ஆட்சி வரும். அப்போது விவசாய கடன், கல்வி கடன் ரத்து செய்யபடும். கிராமப்புற பெண்களுக்கு சுயதொழில் துவங்குவதற்கு ரூ.50 ஆயிரம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும். 10ம் வகுப்பு படித்த பெண்கள் மக்கள் நலப்பணியாளராக பணி அமர்த்தப்படுவார்கள். எனவே, இதனை செய்யக்கூடிய வாய்ப்பை நீங்கள் எங்களுக்கு உருவாக்கிதர வேண்டும். இந்த தொகுதியில் திமுகவுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 தொடர்ந்து கனிமொழி மங்கலகுறிச்சி, அப்பன்கோவில், வரதராஜபுரம், ஆழ்வார்தோப்பு, ஸ்ரீவைகுண்டம், வெள்ளூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.   பிரசாரத்தில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோயல், மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி ஜெயதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினரும், வைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் காவல்காடு சொர்ணகுமார், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், வைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிஜி ரவி, ஏரல் நகர செயலாளர் பார்த்திபன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் காளிதாஸ் பண்ணையார்,  துணை அமைப்பாளர்கள் ராயப்பன், சிவகளை மதிவாணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாயர்புரம் ராஜேஸ் ரவிசந்தர், பெருங்குளம் நகர செயலாளர் சுடலை, வைகுண்டம் நகர செயலாளர் பெருமாள், தொண்டரணி கார்த்தீசன், காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி, வட்டார தலைவர் நல்லக்கண்ணு, மாவட்ட தலைவர் ராமன், சிவகளை பிச்சையா, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி பெஸ்டி, விடுதலை சிறுத்தை கட்சி இளைஞரணி செழியன், மதிமுக மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,by-elections ,campaign ,Kanimozhi ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...