×

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் உள்பட 37 பேர் மனுதாக்கல்


சேலம், மார்ச் 27: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக வேட்பாளர்கள் உள்பட 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். நேற்று கடைசி நாளில் 18 பேர் மனுதாக்கல் செய்தனர்.நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 19ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது. சேலம் தொகுதியில் போட்டியிட முதல்நாளில் சுயேச்சையாக போட்டியிட ஒருவர் மனுதாக்கல் செய்தார். 20,21ம் தேதிகளில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 22ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன், அவருக்கு மாற்றாக அவரது மனைவி கிருஷ்ணவேணி, சோஷலிஸ்ட் யூனிட்டி சென்ட்ர் ஆப் இந்தியா(எஸ்யூசிஐ) சார்பில் மல்லூரைச் சேர்ந்த மோகன்(65), தேசிய மக்கள் கழகம் சார்பில் சேலம் இந்திரா நகரை சேர்ந்த கலைமணி(39), சேலம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொது செயலாளர் சடையன்(36), சுயேட்சையாக சேலம் தளவாய்பட்டியை சேர்ந்த சிவராமன்(40) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் அதிமுக வேட்பாளர் சரவணன், அவருக்கு மாற்றாக அவரது மனைவி கவிதா(37), நாம் தமிழர் கட்சி சார்பில் ஓமலூர் சாமிநாயக்கன்பபட்டியை சேர்ந்த ராசா அம்மையப்பன்(57), மக்கள் நீதி மய்யம் சார்பில் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த பிரபு மணிகண்டன்(28), தமிழ்நாடு விஸ்வகர்மா இளைஞர் பேரவை சார்பில் ெஜயராஜ்42), சுயேட்சைகளாக சேலம் சின்னபுத்தூரை சேர்ந்த ராஜா(55), சேலம் சின்னதிருப்பதி தமிழரசன்(35), தாதம்பட்டி மணிமாறன்(32), அம்மாப்பேட்டை நஞ்சம்பட்டி கலைமன்னன்(43), சேலம் அஸ்தம்பட்டி சுருளிவேல்(46),சேலம் அழகாபுரம் சந்திரசேகரன்(36), சங்ககிரி தப்பக்குட்டையை சேர்ந்த மூர்த்தி(33) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் உள்பட 18 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். முன்னதாக கோட்டை மைதானத்தில் இருந்து அமமுக வேட்பாளர் தனது கட்சி நிர்வாகிகள்,தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பில் இருந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் வேட்பாளருடன் 5 பேரை உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து அமமுக வேட்பாளர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ரோகிணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். எஸ்.கே.செல்வத்துக்கு மாற்றாக அவரது மனைவி ராதா(எ) ராணி மனுதாக்கல் செய்தார். சுயேட்சைகளாக சேலம் அம்மாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த ராமசந்திரன்(29), கன்னங்குறிச்சியை சேர்ந்த பன்னீர்செல்வம்(58), அஸ்தம்பட்டியை சேர்ந்த விஜயா(36),கோரிமேட்டை சேர்ந்த நடராஜன், கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(44), நிலவாரப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன்(56), அஸ்தம்பட்டியை சேர்ந்த ரவி(57),சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த முகமது நஜீருத்தீன்(73), கே.ஆர். தோப்பூரை சேர்ந்த சண்முகம்(49),நெத்திமேட்டை சேர்ந்த சேகர் (41), அழகாபுரத்தை சேர்ந்த குமார்(43), அஸ்தம்பட்டி ஹரிஹரன்(36),திருவாகவுண்டனூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(37), ஏற்காடு ராமலிங்கம் காலனியை சேர்ந்த சிலம்பரசன்(36),அஸ்தம்பட்டி இந்திரா நகரை சேர்ந்த பிரவீணா(45), சேலம் சிண்டி கேட் காலனியை சேர்ந்த ரமேஷ்பாபு(49) ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர் உள்பட 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று (27ம் தேதி) வேட்பு மனுக்கள் பரிசீலனை, அந்தந்த தொகுதிக்காக நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.


Tags : Salem ,constituency ,nominees ,Parliamentary ,AIADMK ,DMK ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஜனநாயக கடமையாற்றியது மகிழ்ச்சி