×

250 அபூர்வா சேலைகள் சிக்கியது

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட சேகோ சர்வ் அருகே நேற்றிரவு பறக்கும்படை அதிகாரி பிரபுகுமார் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜலகண்டாபுரத்தில் இருந்து நெத்திமேடு நோக்கிச் சென்ற மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், உரிய அனுமியின்றி அபூர்வா ரக சேலைகள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வேனை கந்தம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த மணி (20) ஓட்டி வந்தார். இதையடுத்து, பறக்கும்படை அதிகாரிகள் 250 சேலையையும் கைப்பற்றி, சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் சாரதா ருக்மணியிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளின் மதிப்பு சுமார் ₹3 லட்சம் இருக்கும்.

Tags : Apurva ,
× RELATED கையுறை, பாதுகாப்பு அம்சங்களுடன்...