கிருஷ்ணகிரி, ஓசூர் தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமனம்

கிருஷ்ணகிரி, மார்ச் 27: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலுக்கான, இந்திய தேர்தல் பொது பார்வையாளராக டாக்டர். ராம்ராவ் போன்ஸ்லே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரிடம் பாராளுமன்ற தேர்தல் குறித்த சந்தேகங்களை 63692 71353 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதேபோல் பார்வையாளரின் உதவியாளர் விஜய்குமாரிடம் 94422 04491 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் பொது பார்வையாளரை அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், தினமும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சூளகிரி அருகே உள்ள பவர்கிரிட் தங்கும் விடுதியில் நேரில் சந்திக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் தெரிவித்துள்ளார்.  ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பொது பார்வையாளராக கல்யாண்சந்த் ஷமன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓசூர்  இடைத்தேர்தல் குறித்த சந்தேகங்களை தேர்தல் பொது பார்வையாளரிடம் 93601 14573 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் பார்வையாளரின் உதவியாளர் ரமேஷ் என்பவரை 99441 33548 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் பொது பார்வையாளரை அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், ஓசூர் சப்கலெக்டர் அலுவலகத்தில் தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை நேரில் சந்தித்து, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரபாகர் தெரிவித்துள்ளார். 

Tags : Krishnagiri ,nominees ,Hosur Election ,
× RELATED கிருஷ்ணகிரி ஒன்றிய குழு கூட்டம்