தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 27:   தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஜூன் 2018 தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வின் விடைத்தாளின் நகலைக்கோரி, கடந்த 5 முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதற்காக விண்ணப்பித்த தேர்வர்களின் விடைத்தாளின் நகல்களை இன்று (27ம் தேதி) முதல் வருகிற 29ம் தேதி வரை  அதற்கான இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  தொடர்ந்து விடைத்தாள்களின் நகல்களை பெற்ற பாடங்களுக்கு மட்டும் தேர்வர்கள் விருப்பம் இருப்பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையை, கீழ் குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும்.   விடைத்தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு பாடத்திற்கு ₹250ம், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க ஒரு பாடத்திற்கு ₹505ம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை, தேர்வர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செலுத்தலாம். இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு