×

வாகன பெருக்கத்தால் வாகன பெருக்கத்தால் சிறிய நகரங்களில் கணினி வசதியுடன் வீல் அலாய்மென்ட் நிலையங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் வாகனங்களின் அதிகரிப்பால் சிறிய நகரங்களில் கூட கனிப்பொறி வசதியுடன் கூடிய வீல் அலாய்மென்ட் மற்றும் டயர்கள் விற்பனை நிலையம் தொடக்குவது அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு ஒரு கிராமத்ததில் ஆயிரம் வீடுகளில் 20 வீடுகளில் தான் இரு சக்கர வாகனம் இருக்கும். இதபோல் நகர் பகுதியில் குறைந்து அளவு தான் இருசக்கர வாகனம் இருக்கம். இதபோல் கிராமத்தில் ஒரு சில வீடுகளில் தான் நான்கு சக்கர வாகனம் இருக்கும். தற்போது இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த வாகனங்களுக்கு தேவையான டயர்கள் வாங்க வேண்டுமெனில் பெரு நகரங்களுக்கு தான் செல்ல வேண்டும். குறிப்பாக நான்கு சக்கர வாகனங்க ளுக்கு டயர் மாற்ற வேண்டுமானால் திருச்சி, மதுரை போன்ற பெருநகரங் களுக்குதான் போக வேண்டும். ஏனென்றால் அங்குதான் கனிப்பொறி உதவியுடன் வீல் அலாய்மென்ட் பார்க்க முடியும். இதேபோல் பல்வேறு வகையான கம்பெனிகளின் டயர்களை வாங்க இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர்கள் பெரு நகரங்களை நோக்கி வருவார் கள். இதனால் அவர்களுக்கு அதிக அலைச்சல், வீண் செலவு அதிகரித்து வந்தது.

மேலும் காலையில் சென்றால் மாலை ஆகிவிடும். இடைப்பட்ட நேரம் அந்த இடத்திலேயே முடங்கி கிடக்க வேண்டும்.  இந்நிலையில் தற்போது டயர் விற்பனை சிறு நகரங்களுக்கு வந்துள்ளது. குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான அனைத்து வித முன்னணி நிறுவன ங்களின் டயர்கள் கிடைக்கிறது. மேலும் டயர்கள் மாற்றும்போது வீல் அலாய் மென்ட் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதற்கு கனிப்பொறி வசதியுடன் அலாய்மென்ட் கருவி இருக்க வேண்டும். இந்த வசதிகள் அனைத்தும் கொண்ட கடைகள் தற்போது பேரூராட்சி அளவில் உள்ள சிறிய நகரங்களுக்கு வந்துவிட்டடது. இதனால் வாகனம் வைத்திருப் போர்கள் பெருநகரங்களை நோக்கி செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் வாகனத்தை வீல் அலாய்மென்ட் நிலையத்தில் விட்டு விட்டு அந்த பகுதியில் தங்களின் சொந்த பணிகளையும் மேற்கொண்டு நேரத்தை மிச்சப்படுத்துகின்றனர். மேலும் சிறு நகரங்களில் இதற்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் கடைகள் வைத்திருப்போர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : towns ,
× RELATED ஓடை உடைப்புகளை சரி செய்ய கோரிக்கை