×

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

தேனி, மார்ச் 27: மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் வக்கீல்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். தேனி பாரளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக வக்கீல்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இவர் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பல்லவிபல்தேவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘என்னை எம்பியாக தேர்வு செய்தால், மதுரை-போடி அகலரயில் பாதையை 2020க்குள் கொண்டுவருவேன். முல்லைப்பெரியாறு அணைக்காக குரல்கொடுத்தவன் என்ற முறையில் முல்லைப்பெரியாறு பிரச்னைக்காக பாடுபடுவேன்’ என்றார்.

Tags : nominee ,Justice Party ,
× RELATED ஏ.சி.சண்முகம் விரட்டியடிப்பு