×

குழாய் உடைப்பால் பல லட்சம் லிட்டர் காவிரிநீர் வீண்

காளையார்கோவில், மார்ச் 27: காளையார்கோவிலில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் போதிய தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  காளையார்கோவிலில் இருந்து கல்லல் செல்லும் மாநில சாலையின் ஓரமாக அரண்மனை சிறுவயல் கிராமத்திற்கு முன்பு உள்ள சறுக்குப் பாலம் அருகில் காவிரி கூட்டுக்குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் குழாயை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. அப்பகுதியில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. இதனால் கிராமங்களுக்கு போதிய குடிநீர் சப்ளை ஆகவில்லை. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

மக்கள் கூறுகையில், ‘‘இதேபோல் பல்வேறு கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பைப்புகளிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வினாகி வருகின்றது. இதனால் கிரமப்புறம் மற்றும் நகர்புரங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தற்போது போதிய மழையில்லாமல் சிவகங்கை மாவட்டம் கடுமையான வறட்சியை சந்தித்துள்ளது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. காவிரி கூட்டுக்குடிநீரும் இது போன்று வீணடிக்கப்பட்டு வருகின்றது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைத்து உடைப்புகளையும் உடனே தரமான முறையில் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : tube breakthrough ,
× RELATED வடமாடு மஞ்சு விரட்டு: மாடு முட்டி 3 பேர் காயம்