×

பேரையூர் அருகே புதிதாக கட்டிய பாலத்தில் ஓட்டை

பேரையூர், மார்ச் 27: பேரையூர் அருகே புதியதாக கட்டப்பட்ட பாலத்தில் பள்ளம் ஏற்பட்டு, கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் பலம் இழந்து வருகிறது. மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி-சாப்டூர் சாலையில் புதியதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மதுரை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டம், நபார்டு ஆர்.ஐ.டி.எப் திட்டத்தின் கீழ் 2015-16ல் சிறுபாலம் திரும்பக்கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த சாலையில் டி.கல்லுப்பட்டி, பேரையூர், டி.கிருஷ்ணாபுரம், எம்.கல்லுப்பட்டி, எழுமலை உள்ளிட்ட பல முக்கிய ஊர்களில் இந்த சாலையில் பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது. மிக முக்கியம் வாய்ந்த இந்த சாலையில் பாலம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளிலேயே பள்ளங்கள் விழுந்துவிட்டது. அதனை நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டுச்சாலைப்போட்டு மறைத்தனர். ஆனால் இப்போது மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டு பாலம் பலம் குறைந்த நிலையில் உள்ளது. மேலும் பாலம் கட்டிய கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பேருந்துகள், லாரிகள், டூவீலர்கள் டயர்கள் இந்த கம்பியில் சிக்கி பஞ்சர் ஏற்பட்டும், விபத்து ஏற்படுத்தும் சூழலும் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன்பு இந்த பள்ளத்தினை சரிசெய்வது மட்டும் போதாது, பாலத்தின் தன்மை முற்றிலும் பலம் குறைந்து உள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதே நிலை நீடித்தால் இன்னும் 2 ஆண்டுகளில் இந்த பாலம் முழுவதும் இடிந்து விழுந்து விடும் ஆபத்து உள்ளதாக கூறுகின்றனர். சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Peraiyur ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...