×

நத்தத்தில் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நத்தம், மார்ச் 27: நத்தம் செட்டியார்குளம் வெட்டுக்காரத்தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி அதிகாலை அழகர்கோயில் சென்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் 108 சங்காபிஷேகம் நடந்தத. இரவு அம்மன் குளம் சென்று கரகம் பாவித்து நகர்வலமாக கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதில் அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Bhadrakaliyamman ,temple festival ,Natham ,
× RELATED ‘எங்கு பார்த்தாலும் குண்டும்,...