×

டோக்கனுக்கு நகை வழங்க கூடாது

பண்ருட்டி, மார்ச் 27: பண்ருட்டி காவல்துறை சார்பில் தங்கநகை வியாபாரிகள், அடகு வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. சங்க காப்பாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளதால் நகை வியாபாரிகள் அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக டோக்கன் பெற்றுகொண்டு பணம், பரிசு பொருட்கள் வழங்க கூடாது. அடகு வைத்துள்ள நகை உரிமையாளர் மட்டுமே நகையை மீட்க வேண்டும். அரசியல் பிரமுகர்கள் நகையை மீட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.இதில் சங்க தலைவர் சக்திவேல், செயலாளர் விஜய், பொருளாளர் குமார்பால், துணைத்தலைவர் கஜபதி, மாவட்ட தலைவர் தேவராஜ், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருப்பதி கோயிலில் 24 மணி நேரமும் இலவச...