×

பழையநீடாமங்கலம்- வையகளத்தூர் இடையே பாலம் இல்லாததால் தண்டவாளத்தை கடந்து செல்லும் மாணவிகள்

நீடாமங்கலம்,மார்ச்27: நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த  பழைய நீடாமங்கலம் - வையகளத்தூர் இடையே வெண்ணாற்றில் கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என  மாணவர்கள்,பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே ஜங்சனுக்கு சென்னை-மன்னை,கோவை-மன்னை,எர்ணாகுளம்-காரைக்கால்,திருப்பதி-மன்னை மற்றும் வாரத்தில் ஒரு முறை மன்னை-பகத் கி ஹோதி விரைவு ரயிகளும்,மன்னை-மானாமதுரை, திருச்சி-காரைக்கால், திருச்சி,நாகூர்,திருச்சி-வேளாங்கன்னி ,மன்னை-மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் செல்கிறது.இதற்கிடையே பல தடவை காரைக்காலிலிருந்து நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்,நீடாமங்கலம்,மன்னார்குடி பகுதியிலிருந்து அறுவடை செய்யப்படும் நெல் நீடாமங்கலம் கொண்டு வந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் இதற்காக நீடாமங்கலம் ரயிவே கேட் நாள் ஒன்றுக்கு சுமார் 17க்கும் மேற்பட்ட தடவைகள் சாத்தப்படுவதால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் அவதியுற்று செல்கின்றனர். இந்த போக்கு வரத்து நெரிசலை போக்க நீடாமங்கலம் பெரியார் சிலையிலிருந்து பழையநீடாமங்கலம்-வையகளத்தூர் இடையில் வெண்ணாற்றில் பாலம் அமைத்தால் ,வேளாங்கன்னி,நாகை மற்றும் அங்குள்ள ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அரசு மற்றும்  தனியார் பஸ்கள் கேட்டில்  நிற்காமல்  சென்று விடும்.கேட் போட்டாலும் கும்பகோணம்,சென்னை செல்லும் பஸ்கள்,வாகனங்கள் நீடாமங்கலம்-வையகளத்தூர் இடையில் வெண்ணாற்றில் பாலம் அமைத்தால் இதே சாலையில் சென்று அந்த பாலம் வழியாக அங்குள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்காமல்  சென்று விடலாம்.

  இது தொடர்பாக வையகளத்தூர் வடக்குத்தெரு சேகர் கூறுகையில், வெண்ணாற்றில் பாலம் இல்லாததால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வெணணாற்றில் உள்ள ரயில்வே பாலத்தில் ஆபத்தை கருதாமல் மாணவ மாணவிகள் சென்று படித்து வருகின்றனர்.இங்கு பாலம் கட்டினால் மாணவர்கள் பயமின்றி சென்று வருவார்கள் என்றார். பழைய நீடாமங்கலம் நாகராஜ் கூறுகையில், பழைய நீடாமங்கலம்-வையகளத்தூர் இடையே வெண்ணாற்றில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு கோரிக்கையின் அடிப்படையில் மூங்கில் பாலம் நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகம் சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டது.பாலம் கட்டி அதே வருடத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் மூங்கில் பாலம் தண்ணீரில் அடித்து சென்று விட்டது. தற்போது பழங்களத்தூர்,ஒளிமதி உள்ளிட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் பாலம் இல்லாமல் ஆற்று மணலில் பைக்,சைக்கிளில் மற்றும் நடந்தும் செல்கின்றனர் என்றார்.

பைத்தஞ்சேரி மாணவிகள் கிருத்திகா,அபிதியா கூறுகையில், நாங்கள் பள்ளிக்கு வரும் போது அச்சத்துடன் வந்து செல்கிறோம் பள்ளிக்கு வரும் நேரத்திலும்,பள்ளி விட்டு செல்லும் நேரத்திலும் வையகளத்தூரில் வெண்ணாற்றில் உள்ள  ரயில்வே பாலம் வழியாக தான் நீடாமங்கலத்தில் படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகிறோம் வெண்ணாற்றில் பாலம் கட்டினால் அச்சமில்லாமல் சென்று வருவோம் என்றனர்.தமிழக அரசு நீடாமங்கலம் பகுதியில் படிக்கும் வையகளத்தூர், ஒளிமதி,பயித்தஞ்சேரி,அன்பிற்குடையான்,அரவூர்,மாணிக்கமங்கலம் அஸ்கான்ஓடை,கிளியூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் நலன்கருதியும்,நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பயணிகள்,பொது மக்கள் நலன்கருதி பழையநீடாமங்கலம் -வையகளத்தூர் இடையில் வெண்ணாற்றில்கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என்றனர்.

Tags : bridge ,Old Vadivadangalam - Vayalakathur ,ladies ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!