×

ஆலத்தம்பாடி அரசு பள்ளியில் கழிப்பறை வசதியின்றி பரிதவிக்கும் மாணவிகள்



திருத்துறைப்பூண்டி, மார்ச்27: ஆலத்தம்பாடி அரசு பள்ளியில் கழிப்பறை வசதியின்றி மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பூசாலங்குடி ஊராட்சி குன்னியூரில் திருவேங்கடமுதலியார் பண்ணை இருந்தது.இவர்களுக்கு அந்தபகுதியில் 1000 ஏக்கர் நிலம் இருந்தது.இந்த பண்ணையில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள்படிப்பதற்காக திருவேங்கட முதலியார் மனைவிஜானகி  பெயரில் ஆலத்தம்பாடியில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.பின்னர் 1976ஆம் ஆண்டு இந்தபள்ளியை அரசுக்கு தானமாக கொடுத்துவிட்டார்.அதன் பிறகு ஜானகி அண்ணி அரசு உயர்நிலைப்பள்ளியாகஇயங்கிவந்தது.பின்னர் 1996ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியானது.ஆரம்பத்தில் இந்தபள்ளியில் 1700க்கும் மேற்பட்டமாணவமாணவிகள் படித்துவந்தனர்.காலப்போக்கில் ஆசிரியர் பற்றாக்குறையால் தற்போது  இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 650க்கும் மேற்பட்டமாணவமாணவிகள் படித்துவருகின்றனர்.

இந்நிலையில் இந்த பள்ளியிலிருந்த சைக்கிள் நிறுத்துமிடம், வகுப்பறை கட்டிடம், சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டிடம் அனைத்தும் கஜா புயலில் சேதமடைந்துவிட்டது.கஜா புயல் அடித்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இந்தபள்ளியில் சேதமடைந்த எதுவும் சீரமைக்கப்படவில்லை. குறிப்பாக மாணவிகள்பயன்படுத்தும் கழிப்பறை கட்டிடம் சீரமைக்காததால் மாணவிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.இதுகுறித்து மாணவிகள்கூறுகையில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாககழிப்பறைவசதி இருந்தது.அது கஜா புயலில் சேதமடைந்து விட்டது.தற்போது மாணவிகள் சேதமடைந்தகழிப்பறையைதான் பயன்படுத்தி வருகிறோம். அதுவும் சகமாணவிகளை கழிப்பறை வாயிலில் பாதுகாப்பிற்கு நிற்க சொல்லிவிட்டுதான் கழிப்பறைக்கு சென்று வருகிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.எனவே போர்க்காலஅடிப்படையில்  அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்தகழிப்பறை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Girls ,Alathambadi Government School ,toilet facilities ,
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்