×

.நாகை எம்பி, திருவாரூர் எம்எல்ஏ தொகுதி அமமுக, மக்கள் நீதிமய்ய வேட்பாளர்கள் மனு தாக்கல்

திருவாரூர், மார்ச் 27: திருவாரூரில் நேற்று நாகை எம்.பி தொகுதி மற்றும்  திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதிக்காக அ.ம.மு.க  மற்றும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 எம்.பி தொகுதிகள் மற்றும் திருவாரூர் உட்பட 18 எம்.எல்.ஏ தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஆகியவை அடுத்த மாதம் 18ந் தேதி நடைபெறுவதையொட்டி கடந்த 19ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி  நடைபெற்றது.அதன்படி நாகை  எம்.பி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலகமாக திருவாரூர் கலெக்டர் அலுவலகம் இருந்து வரும் நிலையில் இங்கு நேற்று முன்தினம் வரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செல்வராசு, அ.தி.மு.க சார்பில் சரவணன், பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் அனிதா  மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாலதி, ஊழல் ஒழிப்பு இயக்கத்தை சேர்ந்த வேதரத்தினம் மற்றும் சுயேட்சையாக ஜெகதீஸ், பிரேம் என மொத்தம் 6 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செங்கொடி,  மக்கள் நீதி மய்யம் சார்பில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி  குருவையா மற்றும் சுயேட்சையாக அம்பிகாபதி,சவுந்திரராஜன், ஜெயலட்சுமி, பாலகுரு, சம்பத்குமார், சம்பத், சிவகுமார் உட்பட மொத்தம் 9 பேர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இறுதி நாளான நேற்று வரையில் மொத்தம் 15 பேர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.    

திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதி. இதேபோல் திருவாரூர் எம்எல்ஏ தொகுதியின் இடைதேர்தல் நடத்தும் அலுவலகமாக தெற்கு வீதியில் உள்ள ஆர்.டி.ஒ அலுவலகம் இருந்து வரும் நிலையில் இங்கு நேற்று முன்தினம் வரையில் திமுக சார்பில் பூண்டிகலைவாணன், அதிமு.க சார்பில் ஜீவானந்தம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வினோதினி மற்றும் சுயேட்சைகள் 6 பேர் என மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இறுதிநாளான நேற்று மதியம் 1 மணியளவில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ்(53) தேர்தல் அலுவலரான முருகதாசிடம் மனு தாக்கல் செய்தார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் அருண்சிதம்பரம் (28), தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் குணசேகரன் (34) மற்றும் 11 சுயேச்சைகள் என மொத்தம் 14 பேர்மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த  தொகுதியில் 23 பேர் மனு தாக்கல் செய்துள்ளது  குறிப்பிடதக்கது.

Tags : Block Ammukhu ,Thiruvarur MLA ,
× RELATED நாகை எம்பி , திருவாரூர் எம்எல்ஏ...