×

புருஷோத்தமன் கோயிலில் பெருமாள் வீதி உலா

சீர்காழி, மார்ச் 27:சீர்காழி அருகே நாகூரில் 108 வைணவ தளங்களில் ஒன்றான புருஷோத்தமன் கோயிலில் பிரம்மோற்ச விழாவையொட்டி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். முன்னதாக பெருமாளுக்கு திருமஞ்சனம் சேவை சாற்றுமுறை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.


Tags : Purushothaman Temple ,
× RELATED நாட்டார் மங்கலத்தில் விஜயதசமி பண்டிகை : பெருமாள் வீதி உலா