×

வேதாரண்யம் தாலுகாவில் சாக்குகளால் மறைக்கப்பட்ட அண்ணா, பொியார் சிலைகள் சமூக ஆர்வலர்கள் கவலை

வேதாரண்யம், மார்ச் 27: வேதாரண்யம் தாலுகாவில் அண்ணா, பெரியார் சிலைகளை சாக்குகளால்  மறைக்கப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.வேதாரண்யம் தாலுக்காவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் சுவர் விளம்பரங்கள் கொடிக் கம்பங்கள் போன்ற அரசியல் அடையாளங்கள் மறைக்கப்பட்டு வரும் நிலையில் வேதாரண்யம் தாலுகா தென்னம்புலத்தில்  மறைந்த அண்ணா பெரியார் சிலைகளை சாக்குகளை  கொண்டு மூடப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தென்னம்புலம் ஆயக்காரன்புலம்  உள்ளிட்ட பல இடங்களில் பெரியார், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை உள்ளிட்டோரின் சிலைகள் தேர்தல் ஆணைத்தால் மூடப்பட்டுள்ளன.  மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு தீர்வுகாண வழிகாட்டியவர்களில் அண்ணா, பெரியார் முக்கியமானவர்கள்.மேலும் ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையை  சாமானிய மக்களுக்கும் பெற்றுத் தந்த பெருமை இவர்களுக்கு  உண்டு ஜனநாயகத்தின் கட்டமைப்புகளை உருவாக்கித் தந்த தலைவர்களின் சிலைகளை தேர்தல் காலத்தில் மூடி வைத்துக் கொண்டு ஜனநாயக கடமையாற்றுவது முரண்பாடாகவே இருந்து வருகிறது. குறிப்பாக உப்பு சத்யாகிரகத்துக்கு பெயர் பெற்ற வேதாரண்யம் பகுதியில் தலைவர்களின் சிலைகள் சாக்குகளை  கொண்டு மூடப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : brother-in-law ,Vedaranyam Taluk ,Anna ,activists ,idols ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்