×

காஞ்சிபுரம், பெரும்புதூர் மக்களவை தொகுதிகளுக்கு அமமுக, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

காஞ்சிபுரம், மார்ச் 27: காஞ்சிபுரம், பெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளுக்கு மக்கள்நீதி மய்யம், அமமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். ஆரம்பத்தில் மந்தமாக இருந்த காஞ்சிபரம், பெரும்புதுர் மக்களவை தேர்தல் களம், கடைசி நாளான நேற்று சூடுபிடித்தது. ஏராளமானோர் மக்களவை மற்றும் சட் டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் எம்.தங்கராஜ் காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்னையாவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
58 வயதாகும் எம்.தங்கராஜ், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்திய குடியரசு கட்சியின் பொது செயலாளராக உள்ளார். இவருடன் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் உள்ளிட்டோர் வந்தனர்.

இதைதொடர்ந்து, அமமுக சார்பில் முட்டுக்காடு முனுசாமி, வேட்புமனு தாக்கல் செய்தார். இவருடன் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அமமுக செயலாளர் மொளச்சூர் பெருமாள், காஞ்சிபுரம் நகர செயலாளர் மனோகரன், வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளர் வேளியூர் தனசேகரன், காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கூரம் பச்சையப்பன்  உள்ளிட்டோர் வந்தனர். பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வக்கீல் ஸ்ரீதர், தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தரமூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை கொடுங்கையூரை சேர்ந்த இவரது மனைவி யமுனாபிரியா. இவர்களது மகள் கிருத்திகா. சுத்தமான அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், மாவட்டத்தில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன் என இவர் உறுதியளித்துள்ளார். இதைதொடர்ந்து, அமமுக சார்பில் தாம்பரம் நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags : Kanchipuram ,constituencies ,Lok Sabha ,Ammukku ,
× RELATED தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்...