×

விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும்

ஏரல், மார்ச் 27: தூத்துக்குடி தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி நேற்று மாலை சாயர்புரத்தில் பிரசாரத்தை தொடங்கிபேசியதாவது; மத்தியில்ஆளும் பிஜேபி ஆட்சியில் மக்கள், வியாபாரிகள், விவசாயிகள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஜிஎஸ்டி குழப்பத்தால் வியாபாரிகள், சிறிய வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில ஆட்சிகளால் வேலை வாய்ப்பு கிடையாது, விவசாயிகளுக்கு பாதுகாப்பு கிடையாது, பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்துள்ள சம்பவமே இதற்கு காரணம். இந்த ஆட்சிகள் குற்றவாளிகளை காப்பாற்றுகின்ற ஆட்சியாகதான் உள்ளது. மத்தியில் உள்ள ஆட்சி மதவாதத்தை துண்டிவிடுகின்ற ஆட்சியாக உள்ளது. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் கண்டு கொள்ளாத பிரதமர் விளம்பரத்திற்காக ரூ.4,500 கோடிக்கு மேல் செலவு செய்து வருகிறார். மக்களை கண்டு கொள்ளாத மத்திய, மாநில ஆட்சிகளை வருகின்ற தேர்தல் மூலம் மக்கள் தூக்கி எறிந்தால்தான் இந்த மண்ணை காப்பாற்ற முடியும். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான ஆட்சி வேண்டும் என்றால் மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும், மாநிலத்தில் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி மலர வேண்டும். ஆகையால் உங்களுக்காக உழைப்பதற்கு எனக்கு வாய்ப்பு தாருங்கள் என பேசினார்.

தொடர்ந்து பட்டாண்டிவிளை, சுப்பிரமணியபுரம், நடுவக்குறிச்சி, நந்தகோபாலபுரம், சிவத்தையாபுரம், இடையர்காடு, மாரமங்கலம், கொற்கை, வாழவல்லான், சூழவாய்க்கால், சிறுத்தொண்டநல்லூர் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.பிரசாரத்தில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், தூத்துக்குடி முன்னாள் எம்.பி ஜெயதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, வைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சொர்ணகுமார், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், வைகுண்டம் திமுக ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு பிஜி ரவி, மேற்கு கொம்பையா, சாயர்புரம் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராயப்பன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராஜேஸ் ரவிசந்தர் மற்றும் திமுக நிர்வாகிகள் பாலமுருகன், கண்ணன், அறவாழி, கிறிஸ்டோபர், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ராமன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், வட்டார தலைவர்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், சற்குரு, சாயர்புரம் நகர தலைவர் ஜேக்கப் மற்றும் நிர்வாகிகள் சிவனனைந்த பெருமாள், சொரிமுத்து பிரதாபன், மச்சேந்திரன், சுயம்புலிங்கம், சமக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், ஒன்றிய செயலாளர் சதீஸ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், சாயர்புரம் நகர செயலாளர் சாமிதாஸ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

Tags : state governments ,peasants ,
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...