×

டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பேரவை கூட்டம்

ஊட்டி, மார்ச் 26: நீலகிரி மாவட்ட சிஐடியு., டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 8வது ஆண்டு பேரவைக் கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. இதில் சங்க தலைவர் ஆல்தொரை தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் ஜான் அந்தோணிராஜ் பேரவையை துவக்கி வைத்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் மகேஷ், பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கல்விதகுதிக்கேற்ப நிரந்தர மாற்று பணி வழங்க  வேண்டும். மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக, செயல்படும் கடைகளில் பணி வழங்க மாவட்ட மேலாளர் பிறப்பித்துள்ள செயல்முறை ஆணையில்  வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு மூடப்பட்ட கடைகளை திறப்பதற்கு தேவையான பணிகளை மட்டுமே செய்ய உத்தரவிட்டுள்ளது.  இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு தாக்குதல் அபாயம் மற்றும் பருவ நிலை ஆகியவற்றை கணக்கில்கொண்டு டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி என குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பயணப்படி (எப்டிசி), பெட்டிகேஷ் நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து கடைகளுக்கும் சி,சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும். ஹெத்தையம்மன் திருவிழாவில் மது பயன்படுத்தகூடாது என்பதால் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். தேயிலை விவசாயிகளை பாதுகாக்க பச்சை தேயிலை கிலோ ரூ.30 விலை மற்றும் மலை காய்கறிகளுக்கு கட்டுபடியான விலை தீர்மானிக்க வேண்டும். டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் கிடங்கு தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்திட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லுரி அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த பேரவை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Taskmak Employees Union Meeting ,
× RELATED நகராட்சி அதிகாரிகள் அதிரடி கூடலூர்...