×

ஆத்தூரில் ₹3 கோடிக்கு பருத்தி ஏலம்

ஆத்தூர், மார்ச் 26: ஆத்தூரில் நடைபெற்ற ஏலத்தில் ₹3 கோடிக்கு பருத்தி விற்பனையானது.  சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஏலத்தில் ஆத்தூர். நாமக்கல், பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று நடந்த ஏலத்தில் கோவை, ஈரோடு, சேலம், கும்பகோணம், புதுக்கோட்டை மற்றும் அன்னூர் பகுதியைச் சேர்ந்த மில் உரிமையாளர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரினர்.

ஆக மொத்தம் 1300 விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட 14 ஆயிரம் மூட்டை பருத்தி ₹3 கோடிக்கு ஏலம் போனது. ஆர்சிஹெச் ரகம் குவிண்டால் ₹4850 முதல் ₹6269 வரையிலும், டிசிஹெச் ரகம் ₹6,059 முதல் ₹7289 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆர்சிஹெச் ரக பருத்தி குவிண்டாலுக்கு ₹200 முதல் ₹400 வரை கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Cotton auction ,Athur ,
× RELATED டூவீலர் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 பேர் காயம்