×

தொட்டியத்தில் நாளை கொங்குநாடு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

தொட்டியம், மார்ச் 26:  தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது.தொட்டியம் கொங்குநாடு கல்வி நிறுவனத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பபிரிவு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நாளை (27ம் தேதி) நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் கல்லூரியில் நடைபெறும் 8வது பட்டமளிப்பு விழாவில் வேலூர் விஐடி யுனிவர்சிட்டியின் நிறுவனர் டாக்டர் விஸ்வநாதன் பட்டங்களை வழங்கி விழா பேரூரை ஆற்றுகிறார். பட்டம் பெற தகுதியான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை பெற்று சிறப்பிக்குமாறு கொங்குநாடு கல்வி நிறுவனத்தின் தாளாளர் பெரியசாமி அழைப்பு விடுத்துள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Congratulation ceremony ,Kongu Engineering College ,
× RELATED மாவட்ட போட்டியில் சாதனை கீழக்கரந்தை பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா