×

தொட்டியம் மதுரை காளியம்மன் தேர்திருவிழா அசம்பாவிதங்களை தவிர்க்க 6 நாட்கள் மதுக்கடைகள் மூடல் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் முடிவு

தொட்டியம், மார்ச் 26: தொட்டியம் மதுரை காளியம்மன்கோயில் தேர்திருவிழா வருகிற 2ம்தேதி நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்க ஏப்ரல் 4ம்தேதி முதல் ஆறு நாட்கள் தொட்டியம், மணமேட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது என்று பொதுமக்களுடன் நடந்த ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொட்டியத்தில் மதுரைகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். டிஎஸ்பி தமிழ்மாறன், தாசில்தார் ரபீக்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி பாக்குபடைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் வருகிற 2ம்தேதி திருத்தேர் வீதியுலா நடைபெற உள்ளது. மதுரைகாளியம்மன், ஓலைப்பிடாரி அம்மனும் சுமார் 30 அடி உயர தேரினை பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து வருவது வழக்கம். திருவிழாவில் அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாக திருத்தேருக்கு கேந்தி பூ மாலை அணிவிக்க கூடாது.

திருத்தேர் செல்லும் பாதை நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்கள், கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும். பாதைகளை சரி செய்ய வேண்டும். திருவிழா முடியும் வரை வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் விட பொதுப்பணித்துறையினரை கேட்டுக் கொள்வது, பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் சுகாதார வசதிகளை செய்து கொடுப்பது, மேலும் குடிநீர், மின்வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை சரிவர செய்து கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் மருத்துவதுறையினர் முகாம் அமைத்து 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வது. திருவிழாவின்போது எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் அமைதியான முறையில் விழாவை நடத்திடவும், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான பிரசாதங்கள் வாழை இலைகளில் வைத்து வழங்கிடவும், பிளாஸ்டிக் காகிதங்கள், பாட்டில்களின் பயன்பாட்டை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் பொருட்டு தொட்டியம் மற்றும் மணமேட்டில் உள்ள மதுக்கடைகளை 4.4.2019 முதல் 9.4.2019 வரை முழு நேரமும் திறக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  வேட்பாளர்கள் சொத்து மதிப்பு
n திருநாவுக்கரசர் சொத்துவிவரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா தீயத்தூரை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தாக்கல் செய்த அபிடவிட்டில் அவர் மீது எந்த வழக்கும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அவரது சொத்துவிவரம் வருமாறு:ஆண்டு வருமானம் ரூ.25,17,990. திருநாவுக்கரசர் கையிருப்பு ரொக்கமாக ரூ.32,750, மனைவி ஜெயந்தி பெயரில் ரூ.26,150. அவரது பெயரில் வங்கி இருப்பாக ரூ.42,269, மனைவி பெயரில் ரூ.35,733. மனைவி பெயரில் டொயோடா இன்னோவா கார், டெம்போ டிராவல் வேன் உள்ளது. திருநாவுக்கரசர் பெயரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 120 கிராம் தங்கம், மனைவி பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 400 கிராம் தங்கம் உள்ளது. திருநாவுக்கரசர் பெயரில் 16.21 ஏக்கர் நிலம், மனைவி பெயரில் 25.96 ஏக்கர் நிலம் உள்ளது. அசையும் சொத்தாக திருநாவுக்கரசர் பெயரில் ரூ.4,38,833, மனைவி பெயரில் ரூ.2.08 கோடி என மொத்தம் ரூ.2.13 கோடி உள்ளது. அசையா சொத்தாக திருநாவுக்கரசர் பெயரில் ரூ.27,14,500, மனைவி பெயரில் ரூ.81.56 லட்சம் என மொத்தம் ரூ.1.08 கோடி உள்ளது. அசையும் மற்றும் அசையா சொத்தாக மொத்தம் ரூ.3.21 கோடி உள்ளது. ரூ.40,208 கடன் உள்ளது. திருநாவுக்கரசர் பெயரில் வீடு இல்லை.

n இளங்கோவன் சொத்துவிவரம்: தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் சொத்து விவரம் வருமாறு:இளங்கோவன் பெயரில் கையிருப்பாக ரூ.3 லட்சம் அவரது மனைவி டாக்டர் கலாவள்ளி பெயரில் ரூ.5 லட்சம் உள்ளது. வங்கியில் டெபாசிட்டாக ரூ.6.26 லட்சம், மனைவி பெயரில் ரூ.2.45 லட்சம் உள்ளது. மனைவி பெயரில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 1,000 கிராம் தங்கம் உள்ளது. அசையும் சொத்தாக இளங்கோவன் பெயரில் ரூ.15.50 லட்சம், மனைவி பெயரில் ரூ.33.39 லட்சம் என மொத்தம் ரூ.48.90 லட்சம் உள்ளது. அசையா சொத்தாக இளங்கோவன் பெயரில் ரூ.75 லட்சம், மனைவி பெயரில் ரூ.1.50 கோடி என ரூ.2.25 கோடி உள்ளது. அசையும், அசையா சொத்தாக மொத்தம் ரூ.2.73 கோடி உள்ளது. இருவர் பெயரிலும் வீடு உள்ளது. வாகனம் ஏதுமில்லை.

Tags : Madurai Kaliyamman ,disasters ,
× RELATED 2 மனு கொடுத்தும் ஒன்றிய அரசு வெள்ள...