×

அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் டூவீலர் மோதி சிறுமி காயம் மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்

திருச்சுழி, மார்ச் 26: திருச்சுழி அருகே விபத்தில் சிக்கிய சிறுமியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது காரில் அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.சாத்தூரில் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன், சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி காளியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய திருச்சுழி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தமிழ்பாடி அருகே மாங்குளத்தை சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது மகள் செல்வராணி ஆகியோர் டூவீலரில் செல்லும்போது, எதிரே வந்த டூவீலர் மோதி விபத்தில் சிக்கி காயமடைந்தனர். அதனை கண்ட அமைச்சர் உடனடியாக திருச்சுழி தனியார் மருத்துவமணைக்கு தனது காரில் சிறுமியை அழைத்து சென்று சிகிச்சை அளிக்கும் வரை உடனிருந்து ஆறுதல் கூறினார். விபத்தில் சிக்கிய சிறுமியை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags : AIADMK ,candidate ,hospital ,Tuweiler Moti ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...