×

முப்பந்தல் அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டு

*வனத்துறை தகவல்ஆரல்வாய்மொழி : நாகர்கோவிலை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான நெல்லி தோட்டத்தில் பெருங்குடியை சேர்ந்த கிட்டு (52) என்பவர் 150க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 5 நாளுக்கு முன்பு இரவு ஆடுகள் சிதறி ஓடின. கிட்டு அங்கு சென்று பார்த்தபோது ஒரு சிறுத்தை ஆட்டை தூக்கி கொண்டு தோட்டத்தின் பின்னால் உள்ள ஓடைவழியாக காட்டுக்குள் சென்றுள்ளது.. மறுநாள் இரவும் ஒரு ஆட்டை கொண்டு சென்றுள்ளது. இதனால் கிட்டு ஆடுகளை பெருங்குடிக்கு கொண்டு சென்றுவிட்டார்.அதே தோட்டத்தில் தெற்குபெருமாள்புரத்தை சேர்ந்த முருகேசன் 4 ஆண்டுகளாக, 2 மாடுகள் வளர்த்துவருகிறார். இருதினங்களுக்கு முன் அதிகாலை ஒரு சிறுத்தை வந்தது. நாய்கள் குரைத்ததால் முருகேசன் அங்கு சென்றபோது சிறுத்தை காம்பவுண்ட் சுவரில் உள்ள இடைவெளி வழியாக ஓடியதை பார்த்துள்ளனர்.உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதைத் தொடர்ந்து சிறுத்தை வந்த பாதையை ஆய்வு செய்தனர். பின்னர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்….

The post முப்பந்தல் அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டு appeared first on Dinakaran.

Tags : Muppanthal ,Ramakrishnan ,Nagercoil ,Kittu ,Perungudi ,Nelly ,
× RELATED முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி