×

ஹலோ கன்ஸ்யூமர் கலந்துரையாடல்

திண்டுக்கல், மார்ச் 26: திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் துறை சார்பாக ‘ஹலோ கன்ஸ்யூமர்’ எனும் தலைப்பில் நுகர்வோர் விழிப்புணர்வு பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது, கல்லூரி முதல்வர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன் சுயநிதி பிரிவு துணை முதல்வர் நடராஜன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் ஆபிரகாம் கலந்து கொண்டு பேசுகையில், ‘பொருட்களை வாங்கி பயன்படுத்துதான் நுகர்வோர் என்றாலும் கூட அவர் அதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும். நுகர்வோர் ஏதேனும் குறைகளை சந்திக்க நேரிட்டால் அதை உரிய முறையில் விற்பனையாளரிடம் தெரிவிக்க வேண்டும்’ என்றார். மேலும் நுகர்வோர் என்பவர் யார்? நுகர்வோர் பிரச்னை என்றால் என்ன? நுகர்வோரின் கடமைகள்  உள்ளிட்ட பல்வேறு கருத்துகுகள் எடுத்துரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர் ராணி, பேராசிரியர்கள் முத்துக்குமார், ரேகா  ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி