×

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் ஜெயங்கொண்டம் பொதுமக்களுடன் ஆர்டிஓ நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

ஜெயங்கொண்டம், மார்ச் 26: தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்திய ஜெயங்கொண்டம் பகுதி பொதுமக்களுடன் ஆர்டிஓ நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஜெ.மேலூர், தண்டலை, கீழக்குடியிருப்பு, உடையார்பாளையம் உட்பட 13 கிராமங்களில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தி திட்டத்துக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலங்கள், தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகத்தால் கையகப்படுத்தப்பட்டது.  இதற்கான உரிய இழப்பீட்டுத்தொகை இதுவரை வழங்கவில்லை. இதனால் தற்போது தங்களது நிலங்களை திருப்பி கேட்டு கடந்த ஒருவார காலமாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

இதைதொடர்ந்து ஜெ.மேலூர் கிராமத்தில் நேற்று மாலை 4 மணிக்கு உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க 400க்கும் மேற்பட்ட 13 கிராம மக்கள் வந்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே  எங்களின் கோரிக்கையை ஏற்கும் வரை வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம். இதில் எந்த விதமான மாற்றமும் கிடையாது என்று பொதுமக்கள் உறுதியுடன் தெரிவித்தனர். அதற்கு 3 நாட்களுக்கு அவகாசம் கொடுக்குமாறு ஆர்டிஓ கேட்டு கொண்டார். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். முன்னதாக கிராம மக்கள், எங்களுடைய நிலம் தான் வேண்டுமென கையொப்பம் இட்ட மனுவை ஆர்டிஓவிடம் அளித்தனர்.

Tags : battle ,Jeyangondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற இருவர் கைது