க.பரமத்தி,மார்ச்26: க.பரமத்தி ஒன்றியம் காருடையாம்பாளையம் ஊராட்சியில் வாழநாய்க்கன்பட்டி பகவதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறும். விழாவையொட்டி காப்புகட்டும் நிகழ்ச்சி கடந்த பவுர்ணமியன்று நடைபெற்றது. திருவிழாவிற்காக உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கடந்த 23ம் தேதி கோயிலுக்கு வந்தடைதல், பிறகு அங்கிருந்து இரவு 9மணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு காருடையாம்பாளையம், குப்பம், நொய்யல் குறுக்குசாலை, வழியாக சென்று நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலை கடந்து நேற்று முன்தினம் (24ந்தேதி)காலை காவிரி ஆற்றில் புனித தீர்த்தம் எடுத்தனர். பிறகு வந்திருந்த பக்தர்கள் மூவர் இறப்பு சம்பவத்தால் கொடுமுடி காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீர் தீர்த்தம் எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு காருடையாம்பாளையம் முனியப்பன் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அங்குள்ள முனியப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூசாரிகள் அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்ணில் படுத்திருந்த பெண் பக்தர்களுக்கு, பூசாரிகள் அருள்வாக்கு கூறினர். பின்னர், மீண்டும் புனிதநீர் தீர்த்தங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வாழநாயக்கன்பட்டி பகவதியம்மன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு கரகம் பாலித்து பொங்கல் வைக்கப்பட்டு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் சோறு எடுத்து வடிசோறு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்ள் கலந்து கொண்டனர்.