×

தாந்தோணி வெங்கக்கல்பட்டி பாசன குளத்தில் தூர் வாராததால் புதர் மண்டி காணப்படும் அவலம்

கரூர், மார்ச் 26: வெங்கக்கல்பட்டி குளத்தை தூர்வாரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் வெங்கக்கல்பட்டியில் பாசனக் குளம் உள்ளது. அமராவதி ஆற்றுப்பாசன வாய்க்கால் மூலம் வரும் நீரும் மழை நீரும் இந்த குளத்திறகு வருகின்றன. குளத்திற்கு தண்ணீர் வந்ததும் பாசன நிலங்களுக்கு செல்லும் வகையில் மேம்பாலத்தின் கீழ் நீர் வழிப்பாதை அமைக்கப்படடிருக்கிறது. எனினும் பல ஆண்டுகளாக குளம் தூர் வாரப்படவில்லை. சீமைக்கருவேல மரங்கள் முளைத்தும், செடிகொடிகள் மண்டியும் குளம் புதர்போல மாறிவிட்டது. தண்ணீர் வந்தாலும் இந்த குளத்தில் சேகரிக்க முடியாத நிலைமை இருக்கிறது.
இந்த குளத்திற்கு நீர்வரும் வேளைகளில் அருகில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருந்தது. குளம் புதர்மண்டிக் கிடப்பதால் நிலத்தடி நீரும் உயரவில்லை. கால்நடைகளை மேய்க்கும் மேய்ச்சல் பகுதியாக மாறிவிட்டது. குடிமராமத்து பணிகளின் வாயிலாக குளததை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Dandonti Vengalakalpatti ,irrigation pond ,pond mundi ,
× RELATED விளவங்கோடு ஆலஞ்சோலை அருகே பாசன...