×

வருஷாபிஷேக விழா

திருச்செந்தூர், மார்ச் 26: திருச்செந்தூர் டிபி ரோட்டில் உள்ள  ரத்த சாமுண்டி முத்துபேச்சியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கும்ப பூஜை, வேத பாராயணம், யாக பூஜையை தொடர்ந்து பூர்ணாகுதி வழிபாடு நடந்தது. பின்னர் விமான கோபுர கலசத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது, தொடர்ந்து அம்மனுக்கு பலவகையான அபிஷேகம். அலங்கார தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags : Vasashishish ,ceremony ,
× RELATED உத்தராகண்ட்டில் மெஹந்தி விழாவின்போது மணப்பெண் உயிரிழப்பு..!!