×

கருவில் பாலினம் குறித்து தெரிவிக்கும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை

குளத்தூர்,மார்ச் 26: குளத்தூரையடுத்த வேம்பார் பீப்புள் ஆக்சன்பார் டெவலப்மென்ட் கூட்ட அரங்கில் பெண் குழந்தை கருக்கொலை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட  சமகல்வி இயக்க செயலாளர் சாத்தையா தலைமை வகித்தார். ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி பணியாளர் மரியஸ்டெல்லா வரவேற்று பேசினார். தமிழ்நாடு சமகல்வி இயக்க குழந்தை உரிமைகள் தொழில் நுட்ப சிறப்பறிவாளர் அறிவழகன் ராயன் பெண் குழந்தை கருக்கொலை குறித்தான ஆய்வின் அறிக்கைகள் குறித்து பேசினார்.

 தமிழ்நாடு சமகல்வி இயக்க தலைவர் ஜெயம், செயல் இயக்குநர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் பிரகாஷ், குழந்தைகள் நலக்குழுமம் அழகுசுந்தர்ராஜ், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், விளாத்திகுளம் மேற்பார்வையாளர் தமிழரசி ஆகியோர் பெண் கருக்கொலை தடுப்பு குறித்து பேசினார். மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களை அவ்வப்போது கண்காணிக்க கிராம அளவில் பணியாற்றும் அலுவலர்கள் நியமிக்க வேண்டியும், கருவில் பாலினம் பற்றிய தகவல் வெளியிடும் ஸ்கேன் மையம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சம கல்வி இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Tags : scanning centers ,
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு