×

காட்பாடியில் ரயில் மோதி வாலிபர் பலி

வேலூர், மார்ச் 26: காட்பாடி-கார்ணாம்பட்டு அருகே ரயில் தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ எழில்வேந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பலியானது தெரிய வந்தது. இறந்தவரின் வலது பக்க கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்த தழும்பு காணப்பட்டது.

இதையடுத்து போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : teenager ,Katpadi ,
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி