குலசேகரத்தில் பறக்கும்படை அதிரடி கட்சி கொடியுடன் வந்த கார் பறிமுதல்

குலசேகரம், மார்ச் 26: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் குமரி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரம் நடக்கும் இந்த சோதனையில் இதுவரை லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 சட்டசபை தொகுதியிலும் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குலசேகரம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சானிஷா தலைமையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது செருப்பாலூர் பகுதியில் கட்சி கொடியுடன் வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தேர்தல் விதிமுறை மீறி கட்சி கொடியுடன் வந்த காரை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த கார், சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் அஜித்ராஜ் (23) என்பவருடையது என தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் அந்த காரை தக்கலை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: