×

திமுக வேட்பாளருக்கு தமிழ்புலிகள் பிரச்சாரம்

விருதுநகர், மார்ச் 22: திமுக வேட்பாளரை ஆதரித்து தமிழ் புலிகள் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.  விருதுநகரில்  நேற்று தமிழ் புலிகள் கட்சி  செயற்குழு மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளம்புலிகள் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய குழு அமைத்தனர். மேலும் சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Thampi ,candidate ,DMK ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...