×

ஆற்றில் மணல் கடத்திய 12 மாட்டுவண்டிகள் பறிமுதல்

நெல்லிக்குப்பம், மார்ச் 22: நெல்லிக்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆறு மற்றும் கெடிலம் ஆற்றில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, கணபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் ஓட்டேரி பகுதியில் மணல் கடத்தலை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெடிலம் ஆற்றில் இருந்து எவ்வித அனுமதியின்றி மணலை ஏற்றிவந்த 12 மாட்டு வண்டிகளை போலீசார் பிடித்து விசாரணை  செய்தனர். அதில், ஓட்டேரி பகுதியை சேர்ந்த குமார் (30), முத்துலிங்கம் (60), பால
கிருஷ்ணன் (65), தணிகாச்சலம் (47), கவுதம் (27), சுப்புரமணி (48), வீரப்பன் (35), சபரிநாதன் (28), கேசவன் (42), மாயவன் (55), புண்ணியமூர்த்தி (22), வீரயன் (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்து கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள காவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பு அருகே பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags : river ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை