×

நெய்வேலியில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

நெய்வேலி, மார்ச் 22: கடலூர் மேற்கு மாவட்டத்தில் திமுக மற்றும் மத சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனை மற்றும் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரமேஷ் அறிமுக கூட்டம் நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நடந்தது. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ராசேந்திரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், முத்துக்குமார்.

காங்கிரஸ் பெரியசாமி, ராதாகிருஷ்ணன், மா.கம்யூ., திருவரசு, இந்திய கம்யூனிஸ்ட் மணிவாசகம், சேகர், மதிமுக ராமலிங்கம், விசிக தாமரைசெல்வன், அறிவுடை நம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிமுன் அன்சாரி, திக துரை.சந்திரசேகர், தவாக சின்னதுரை, அறிவழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். கடலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ரமேசை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெய்வேலி நகர திமுக செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

Tags : alliance parties ,DMK ,Neyveli ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...