×

தென்காசி முத்தாரம்மன் கோயில்களில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

தென்காசி, மார்ச் 22: தென்காசி கீழ மற்றும் மேல முத்தாரம்மன் கோயில்களில் பங்குனி பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்காசி கீழ மற்றும் மேல முத்தாரம்மன் கோயில்களில் இந்த ஆண்டு பங்குனி மாத பூக்குழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி தீபாராதனைகள், இரவில் அம்பாள் வீதி உலா நடக்கிறது. கீழ முத்தாரம்மன் கோயிலில் 30ம்தேதி ஆனைப்பாலம் சிற்றாறிலிருந்து இரவில் பூங்கிரகம் ஊர்வலமாக எடுத்து வருதல், 31ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பூக்குழி திருவிழா நடக்கிறது. தொடர்ந்து ஏப்ரல் 4ம் தேதி துலாபாரம் நிகழ்ச்சியும், 7ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. மேலமுத்தாரம்மன் கோயிலில் 30ம் தேதி பூக்குழி திருநாள் திரவுபதி அம்மன் திருக்காப்பூட்டு காலையில் நடக்கிறது. இரவில் பூங்கிரகம் புறப்படுதல், 31ம் தேதி காலையில் 5 மணிக்கு பூக்குழி இறங்குதல் வைபவம் நடக்கிறது. ஏப்ரல் 4ம் தேதி காலையில் மஞ்சள்நீராட்டு, 5ம் தேதி பாரிவேட்டை, 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை அம்பாள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து சமுதாய பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : procession ,festival ,Tenkasi Mutharamanan ,
× RELATED காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில்...