×

பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு

பாபநாசம், மார்ச் 22: பாபநாசத்தில் வட்டார வள மையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் 73 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடந்தது.
7 குறுவள மையங்களில் நடந்த பயிற்சியில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 6 உறுப்பினர்கள் வீதம் பங்கேற்றனர்.

பயிற்சியில் 7 ஆசிரியர் பயிற்றுநர்கள், 7 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர். அய்யம்பேட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த பயிற்சியை மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஆசிரியர் பயிற்றுனர் மதியழகன் பார்வையிட்டனர். பயிற்சியில் பணியின் முக்கியத்துவம், மாணவர்கள் சேர்க்கை, பள்ளி வளர்ச்சி குறித்து விளக்கப்பட்டது.

Tags : school management development team members ,
× RELATED பொதுமக்கள் எதிர்பார்ப்பு பள்ளி...