×

கண்டியூர் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்

திருவையாறு, மார்ச் 22: கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருவையாறு அடுத்த கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைதொடர்ந்து கடந்த (16ம் தேதி) பலராம அவதாரம் கருட சேவையை முன்னிட்டு ராயம்பேட்டையில் கண்டியூர் ஹரசாபவிமோசன பெருமாள், திங்களுர் வரதராஜபெருமாள், ராயம்பேட்டை வரதராஜபெருமாள்களின் ஒரே இடத்தில் கருடசேவை நடந்தது.
கடந்த 20ம் தேதி வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது. இந்நிலையில் நேற்று கோயில் தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரசாபவிமோசன பெருமாள் அமர்ந்து வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். நேற்று மாலையில் தீர்த்தவாரி நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வரும் 28ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 29ம் தேதி அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. தினம்தோறும் காலையில் பல்லக்கிலும் இரவில் பல்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 30ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது. பங்குனி பெருவிழா வரும் 30ம் தேதி வரை 18 நாட்கள் நடக்கிறது. திருக்காட்டுப்பள்ளி: கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் தேரோட்டம் நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் அமைந்துள்ள அப்பால ரங்கநாதர் கோயில் 108 திவ்ய தேசங்களில் 8வது சேத்திரமாகும். இந்த கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. முக்கிய வீதி வழியாக தேரில் எழுந்தருளி பக்தகர்ளுக்கு சுவாமி சேவை சாதித்தார். பாபநாசம்: பாபநாசம் அடுத்த அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. கடந்த 19ம் தேதி திருக்கல்யாணம், வசந்த உற்சவம் நடந்தது. கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Tags : festival festival ,Kandiyur Perumal ,
× RELATED அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடி தேர்...